மதுரையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 25 ஆம் தேதி முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் - 2ஆம் கட்டத்தை மதுரை முத்துப்பட்டி கள்ளர் உயர்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் பின் அங்கு பயிலும் பள்ளி மாணவர்களோடு உணவருந்தி மகிழ்ந்த அமைச்சர் அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சிலரை அழைத்து உரையாடினார்.
பேசிக்கொண்டிருக்கும்போதே 7ஆம் வகுப்பு படிக்கும் விஷ்வா என்ற மாணவன் ”தலை வலிக்கிறது, மயக்கம் வருகிறது” என கூறிய உடன் அமைச்சர் உடனடியாக அந்த மாணவனை தனியாக அமரச்செய்து அவனுக்கு இனிப்பும், உணவும் வழங்கிடச் சொன்னார். அவனிடம் உரையாடிய அவனது குடும்ப சூழ்நிலையை பின் கேட்டறிந்தார்.
அமைச்சர் அவனை மருத்துவ பரிசோதனை செய்யவேண்டுமென அங்குள்ள ஆசிரியர்களிடமும் தனது அலுவலக பணியாளர்களிடம் அறிவுறுத்தினார். பின்னர் அவர் அறிவுறுத்தலின் பேரில் ஒட்டுமொத்தமாக அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டது.
எனக்கு சைக்கிள் வேண்டுமென கேட்டார்,
நான் உனக்கு சைக்கிள் வாங்கித் தருகிறேன்" என்று கூறினார்
இந்த நிலையில் மாணவனை 2 நாட்களுக்கு முன் அவனை தனது இல்லத்திற்கு அழைத்து வந்து சர்ப்ரைஸ் ஆக புதிய சைக்கிள் ஒன்றை பரிசளித்து மகிழ்ந்தார் அமைச்சர்.