ஆவின் ஆணையாளர், மதுரை ஆவின் பொது மேலாளர் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தைக்காக கோரிக்கை வைக்கப்பட்ட நிலையிலும் தங்களை கண்டுகொள்ளாத நிலையில் திட்டமிட்டபடி 11ஆம் தேதி முதல் ஆவினுக்கு பால் அனுப்புவதே நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளத.
இதனால் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு மூன்று ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதை ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் மூலமாக உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் கிடைக்காத நிலையில் தற்போது போராட்டத்தை அறிவித்துள்ளனர்.