மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி அம்மாளை இன்று மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் நேரில் சந்தித்து அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் துணைமேயர் நாகராஜன் மற்றும் சிபிஎம் மாநில குழு உறுப்பினர் விஜயராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.