மதுரை கோ புதூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு அருகில் இன்று பள்ளி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு நடத்திய ஆய்வில் கஞ்சா விற்ற விளாங்குடி பகுதியைச் சேர்ந்த ரெங்கநாதன் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து அரைகிலோ கஞ்சா பாக்கெட்டுகளை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.