டெல்லியின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராகும் அதிஷி

55பார்த்தது
டெல்லியின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராகும் அதிஷி
டெல்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதலமைச்சர் அதிஷி தேர்வு செய்யப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லியில் இன்று (பிப்., 23) நடைபெற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக அவர் தேர்வானார். டெல்லி சட்டப்பேரவை வரலாற்றில் இந்தப் பதவிக்கு பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை. முதலமைச்சராக பாஜகவின் ரேகா குப்தா பதவியேற்றுள்ள நிலையில், விரைவில் சட்டமன்றத்தில் இரு பெண் தலைவர்களும் நேருக்கு நேர் அமரவுள்ளனர்.

தொடர்புடைய செய்தி