மதுரை: போலி பணி ஆணை கொடுத்து பல கோடி மோசடி.

50பார்த்தது
மதுரை மாநகர் பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்தவர் கௌதம் 35. இவர் அரசியல் கட்சிகளில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும் பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பி மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த சுரேஷ், பெருங்குடியை சேர்ந்த அழகுராஜா , உசிலம்பட்டியை சேர்ந்த சதீஷ் பாண்டி , வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன், பழனி உள்ளிட்டவர்கள் ரூ 45 லட்சம் வரை கௌதமிடம் கொடுத்துள்ளனர்.

பணத்தை வாங்கிய அவர் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் பணி நியமன ஆணைகள் வழங்கி உள்ளார். மேலும் அவர்களிடம் பள்ளி கல்வித்துறையின் அடையாள அட்டைகளையும் வழங்கி உள்ளார். இந்த பணி நியமன கடிதங்கள் குறித்து நேரடியாக விசாரித்த போது அவை போலியானது என தெரிய வந்தது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. அவர் மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக சுமார் 4 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. எனவே கவுதம் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்படும் நபர்கள் மீதும் முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த புகார் மனு தொடர்பாக போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி