மதுரை: குடும்பத் தகராறு; ஒருவர் தற்கொலை

63பார்த்தது
மதுரை: குடும்பத் தகராறு; ஒருவர் தற்கொலை
மதுரை: பாலமேடு பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (55) என்ற நபர், நேற்று (அக்.,8) இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூர்த்தி, மனைவி பாப்பாத்தி மற்றும் இரண்டு மகன்களுடன் கோணப்பட்டி கிராமத்தில் வசித்து வந்தார்.
குடிப்பழக்கத்துக்கு அடிமையான மூர்த்தி, தினமும் மனைவியிடம் பணம் கேட்டு சண்டை போடுவது வாடிக்கையாக இருந்துள்ளது.

நேற்று (அக்.,8) இரவு வீட்டிற்கு வந்த மூர்த்திக்கு வாந்தி எடுத்ததால், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனையில் பூச்சி மருந்து குடித்தது தெரியவந்தது. சிகிச்சை பலனின்றி இன்று இரவு மூர்த்தி உயிரிழந்தார். இச்சம்பவம் குடும்பத்தினரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி