சித்திரை பெருவிழா தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் இன்று அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
மாநகராட்சி ஆணையாளர் சித்ராவிஜயன், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த், மீனாட்சியம்மன் மற்றும் கள்ளழகர் கோவில் அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வை முன்னிட்டு மே -8ஆம் தேதி முதல் வைகை அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படவுள்ளது என பொதுப்பணித்துறை நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் வைகையாற்று பகுதி, கோரிப்பாளையம், செல்லூர் ஆகிய பகுதிகளில் மேம்பால பணிகள் நடைபெறுவதால் கூடுதல் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் குழாய் பணிகள் மற்றும் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெறுவதால்
வைகையாற்று பகுதியில் ஆகாய தாமரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டார்.
மேலும், மதுரை மாநகர பகுதிகளில் சித்திரை திருவிழாவின் போது தொலைதொடர்பு மற்றும் கேபிள் டிவிக்களுக்கான இணைப்பு கேபிள்களை உயரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.