தென் மாவட்டங்களில் மிக முக்கியமான பேருந்து நிலையமான மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் கழிவு நீர் கால்வாய் அடைப்பை சரிசெய்ய மாநகராட்சி பணியாளர்கள் உரிய உபகரணங்கள் இல்லாமல் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.