தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் நேற்று (ஜூலை 4) நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், திமுக அணி மற்றும் பாஜக அணிகளுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை என்பதை திட்டவட்டமாக அறிவித்தார். இதன் மூலம் அரசியல் விஜய் தலைமையிலான தவெக, தனது கூட்டணி விவகாரத்தை தெளிவுபடுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சி தனித்துப்போட்டி என ஏற்கனவே அறிவித்துவிட்டது. எனவே தமிழக அரசியல் களம் நான்கு முனை போட்டிக்கு தயாராகி வருகிறது.