கன்னியாகுமரி: கருங்கல் அருகே திருமணமான 6 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். ஜெமலா (26) என்ற பெண்ணும், நிதின் ராஜ் (26) என்பவரும் காதலித்து, வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஜனவரி 8ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். நிதின் ராஜ் BE படித்திருந்த நிலையில் சரியான வேலை இல்லாமல் இருந்தார். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது ஜெமலா தற்கொலை செய்துகொண்டார். இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர்.