நாற்காலிகள் பல வகையில் தயாரிக்கப்படும். உலகின் மிகப்பெரிய நாற்காலியை அமெரிக்காவின் இல்லினாய்ஸை சேர்ந்த ஜிம் போலின் என்பவர் உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இந்த நாற்காலி 56 அடி 1 அங்குலம் உயரமும், 32 அடி 10 அங்குலம் அகலமும் கொண்டுள்ளது. அமெரிக்காவின் கேசி சிட்டி ஹாலுக்கு வெளியே இந்த நாற்காலி காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி தயாரிக்கப்பட்டது.