இஸ்கான் கோயில் தேர்த்திருவிழா - போக்குவரத்து மாற்றம்

14பார்த்தது
இஸ்கான் கோயில் தேர்த்திருவிழா - போக்குவரத்து மாற்றம்
கோவையில் உள்ள இஸ்கான் கோயிலில் தேர்த்திருவிழா நடைபெறுவதையொட்டி, இன்று பிற்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை சில சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
பேரூரிலிருந்து செட்டிவீதி, ராஜவீதி வழியாக மாநகருக்கு வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மாற்றாக, செல்வபுரம் பள்ளி அருகே வலது திரும்பி, அசோக்நகர், பேரூர் பைபாஸ், உக்கடம் வழியாக செல்லலாம். வைசியாள் வீதி, செட்டிவீதி வழியாக பேரூர் செல்லும் வாகனங்கள், பைபாஸ், சிவாலயா சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

தொடர்புடைய செய்தி