ஜெயலலிதா பிறந்த நாள் விழா - பிரம்மாண்ட கேக் சிலை

1030பார்த்தது
ஜெயலலிதா 76வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மதுரையில் அவர்க்கு பிரம்மாண்ட கேக் சிலை அமைத்துக் கொண்டாட்டம்.

மறைந்த தமிழ்நாடு முதல்வர், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

மதுரையில் அதிமுக மாநில மருத்துவ அணி சார்பில், அந்த அணியின் மாநில இணைச் செயலாளர் டாக்டர் சரவணன், Ex எம் எல் ஏ, தனது நரிமேடு மருத்துவமனை வளாகத்தில் 300 கிலோ இனிப்பு கேக்கில், ஆறரை அடி உயரத்தில் ஜெயலலிதா உருவச் சிலை அமைத்து, மலர்களால் அலங்கரித்து கட்சியினர் பார்வைக்காக வைத்திருந்தார்.

ஏராள அதிமுகவினர் ஆர்வமுடன் வருகை தந்து, அவர்களது தலைவிக்கு மலர் தூவி வணங்கி, தங்களது மொபைல்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

கலாம் உலக சாதனை அமைப்பு, இந்த கேக் சிலை அமைத்தமைக்கு டாக்டர் சரவணனுக்கு விருது வழங்கி கெளரவித்தது.

மேலும், வந்திருந்த அனைவர்க்கும் கமகம மட்டன் பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி