மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, விக்கிரமங்கலம் ஊராட்சிக்
குட்பட்ட கோவில்பட்டி முதல் பாண்டியன் நகர் வரை ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு வனப்பகுதியில் உள்ள சாலையை அகல படுத்த வேண்டும் என, இரு தினங்களுக்கு முன்பு சோழவந்தான் தொகுதிக்கு வந்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம், பொதுமக்கள் மற்றும் திமுகவினர் வைத்த கோரிக்கைக்கு அந்த தொகுதி அதிமுக எம்எல்ஏ தொகுதி, அதிமுக எம்எல்ஏ-வை நேரில் வந்து பார்க்க சொல்லுங்கள் என கூறியது சர்ச்சையான சூழலில், இன்று உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் இந்த பகுதியை நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய உசிலம்பட்டி எம். எல். ஏ. அய்யப்பன் கூறுகையில்:
சாலையை அகல படுத்த பலமுறை வனத்துறையிடமும், சட்டமன்றத்திலும், மாவட்ட ஆட்சியர் ஆறு மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் ஆய்வு கூட்டத்திலும் கோரிக்கையாக வைத்துள்ளேன்.
இந்த பகுதியை
இரு தினங்களுக்கு முன்பு சோழவந்தான் தொகுதிக்கு வந்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தேனிடம் திமுகவினர் தான் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், பொதுமக்களின் கோரிக்கையையும், திமுகவினரின் கோரிக்கையையும் நிராகரித்து விட்டு சென்றிருக்கிறார்.
அண்ணா அறிவாலயத்திற்கு மட்டும் அமைச்சர் என்றால், மதிவேந்தன் அமைச்சர் என்பதா, மதி இழந்த அமைச்சர் என்பதா என தெரியவில்லை. இந்த விக்கிரமங்கலம் கோவில்பட்டி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றார்.