மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் செலவில் மதுரை பழங்காநத்தம் 71-வது வார்டு தெற்கு தெரு பகுதியில் புதிய நியாய விலை கடை திறப்பு விழாவிற்கு வருகை தந்த முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்று நியாய விலை கடையை திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
மத்திய அரசை கண்டித்து திமுக அரசு போராட்டம் என்ற பெயரில் நாடகம் ஆடுகிறார்கள்.! மக்களை ஏமாற்றும் ஒரு நாடகம் தான் இந்த ஆர்ப்பாட்டம் என தெரிவித்தார்.
திமுகவிற்கு தங்களது குடும்ப மட்டுமே முக்கியம் என்றும், மக்கள் பிரச்சினையில் அக்கறை இல்லை, கச்சத்தீவு மீட்பது, முல்லை பெரியாறு அணை மீட்பு, இது போன்றவைகளில் முதல்வருக்கு கவனம் இல்லை என்றார்.
மத்திய அரசின் பஞ்ஜெட் தாக்கல் இன்னும் முழுமையாக வெளியிட படவில்லை. பஜ்ஜெட் அறிக்கை முழுமையாக வந்த பிறகு தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது ஏன் குறித்தும் கண்டனம் குறித்து அதிமுக தலைமை முடிவெடுக்கும் என்றார்.
3 ஆண்டுகளில் 3 முறை மின்கட்டனம் உயர்வு. திமுக அடுத்தாண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவார்கள். , ஸ்டாலின் எதிர்க்கட்சி என்றால் தமிழகம் வரும் மோடிக்கு கருப்பு பலூன், ஆளும்கட்சி என்றால் வெள்ளை கொடை பிடிப்பது ஸ்டாலின் நாடகம் தான் என விமர்சனம் செய்தார்.