அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
மு. பூமிநாதன், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆணைக்கினங்க மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட அரசு இராஜாஜி மருத்துவமனையில் அமைந்துள்ள அம்மா உணவகம் சுகாதார குறைவாகவும், இயந்திரங்கள் பழுதாகி உள்ளதாக வந்த செய்தியை அறிந்து இன்று காலை அம்மா உணவகத்தில் மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன் நேரில் சென்று பார்வையிட்டு சுகாதாரமாகவும், தரமாகவும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
உடன் தெற்கு மண்டல தலைவர் மா. முகேஷ்சர்மா மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். முனியசாமி, தல்லாகுளம் பகுதி செயலாளர் புகழ்முருகன், தொண்டரணி அமைப்பாளர் அமிர்தராஜ், வட்டச் செயலாளர் மகேஷ்குமார் மற்றும் மருத்துவர்கள் பணியாளர்கள் உடன் இருந்தனர்.