மாணவர்களை ஏற்றாமல் சென்ற அரசு பேருந்து: கேள்வி எழுப்பிய பெண்

79பார்த்தது
மதுரையில் கடந்த வாரம் அரசு பேருந்து ஒன்று ஒத்தக்கடை அல்ட்ரா கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் மாணவர்கள் நின்று கொண்டிருந்த போது பேருந்தை மறித்துள்ளனர்

அதனை கண்டு கொள்ளாமல் அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால் பேருந்து ஏறுவதற்காக சில மாணவர்கள் கீழே விழுகும் அளவிற்கு வேகமாக ஓடி வந்துள்ளனர்

இதனை பார்த்து பேருந்தில் பயணித்த பயணியான அமுதா என்ற பெண் அரசு பேருந்து ஓட்டுநரை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்

அவர்களுடைய வரிப்பணத்தில் தான் நீங்கள் சம்பளம் வாங்குகிறீர்கள் எனவும் உங்கள் பிள்ளைகளாக இருந்தால் இதுபோன்று நடுரோட்டில் விட்டுவிட்டு வருவீர்களா எனவும் கேள்வி எழுப்பினார்

கொஞ்சமும் மனசாட்சியோடு நடந்து கொள்ளுங்கள் என ஓட்டுநரை பார்த்து கேள்வி எழுப்பியதோடு நடத்துனரிடமும் நேரடியாக சென்று கேள்வி எழுப்பிய உள்ளார்.

மேலும் அந்தப் பெண் மாணவர்களை பார்த்து உங்களுடைய சக மாணவர்களை இதுபோன்ற அரசு பேருந்து ஏற்றாமல் வருகிறார்கள் நீங்கள் இவற்றை தட்டி கேட்க கூடாத என கேள்வி எழுப்பினார்

இனிமேல் இதுபோன்று பள்ளி மாணவர்களை ஏற்றாமல் நடுவத்தில் விட்டுவிட்டு வராதீர்கள் என ஓட்டுனருக்கு அறிவுரை வழங்கினார்.




இதனை அந்தப் பேருந்தில் வந்த இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில் இந்த வீடியோ பார்ப்பது அதிக அளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது

தொடர்புடைய செய்தி