புத்தாண்டையொட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு.

71பார்த்தது
புத்தாண்டையொட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர்ச்சந்தையில் பூக்கள் விலை உயர்வு.


புத்தாண்டையொட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர்ச்சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. பனிப்பொழிவு காரணமாகவும் பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் விலையும் அதிகரித்துள்ளது.
அதன்படி மதுரை மாட்டுத்தாவணி, மலர் சந்தையில் மல்லிகைப்பூ கிலோ 1500 ரூபாய்க்கும், பிச்சிப்பூ கிலோ 1000 ரூபாய்க்கும், முல்லை கிலோ 1300 ரூபாய்க்கும், அரளிப்பூ கிலோ 300 ரூபாய்க்கும், சம்பங்கி பூ கிலோ 250 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது, ரோஸ் கிலோ 150 ரூபாய்க்கும், துளசி கிலோ 50 ரூபாய்க்கும், தாமரைப்பூ 15 ரூபாய்க்கும், 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட மரிக்கொழுந்து 80 ரூபாய்க்கும், செவ்வந்தி பூ 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


நேற்று 1000ரூபாய்க்கு விற்கப்பட்ட மதுரை மல்லிகைப்பூ புத்தாண்டையொட்டி 1500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


மேலும் மற்ற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.


நாளை மேலும் பூக்களின் விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி