மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆக. 13) மாலை மாவட்ட வருவாய்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் பேசினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.