கிரைம் பிராஞ்ச் பகுதியில் ஆர்ப்பாட்டம்.

60பார்த்தது
மதுரை கிரைம் பிராஞ்ச் பகுதியில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை தெற்கு வாசல் அருகே கிரைம் பிராஞ்ச் பகுதியில் இன்று (ஜூன் 7) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பாலஸ்தீனியத்தின் தெற்கு எல்லையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு கேந்திரமாக அறிவிக்கப்பட்ட ரஃபா பகுதியில் கூடாரங்களில், இரயிலில் உறங்கி கொண்டிருந்த அப்பாவி மக்கள் மற்றும் குழந்தைகள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்திய இஸ்ரேலை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

தொடர்ந்து மயிலை அப்துல் ரஹீம் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினார்கள்.

தொடர்புடைய செய்தி