சுங்கச் சாவடி விவகாரம்: அமைச்சர் மூர்த்தி பேட்டி

50பார்த்தது
மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியினை அகற்றக் கோரி திருமங்கலம் வணிகர் சங்கம் சார்பில் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்து.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் எம் சாந்தி மற்றும் NHAI அதிகாரிகள்
சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு மற்றும் போராட்டக் குழுவினர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

அப்போது பேட்டியளித்த அமைச்சர் மூர்த்தி,

சுங்கச்சாவடி தொடர்பான நடைபெற்ற பேச்சு வார்த்தை 100% சதவிகிதம் வெற்றி பெற்றதாக தெரிவித்தார். மேலும் ஏற்கனவே 2020 முதல் 23 வரை செலுத்த வேண்டிய கட்டணம் குறித்து நோட்டீஸ் அனுப்பியது தொடர்பான கேள்விக்கு, அது செலுத்த தேவையில்லை என தெரிவித்த அமைச்சர், 2020 ஆம் ஆண்டு என்ன நடைமுறைகள் உள்ளன என கேள்விக்கு, அதெல்லாம் இருக்கு இருக்கு என கூறியபடியே கிளம்பினார். மேலும் திருமங்கலம் பகுதி மக்களுக்கு கட்டண விளக்கு தொடர்பான எழுத்துப்பூர்வ அறிவிப்பு உள்ளதா என கேள்விக்கு, அதெல்லாம் தலைமையில பேசிட்டு இருக்காங்க அது ரிட்டனா முடிவாகிடும் என தெரிவித்து விட்டு சென்றார்.

தொடர்புடைய செய்தி