மதுரையில் தேவர் குருபூஜை விழா குறித்த ஆலோசனைக்கூட்டம்

71பார்த்தது
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் மாமன்னர் மருதுபாண்டியர் நினைவு நாள் மற்றும் இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சிகள் தொடர்பாக மதுரை நகரிலும், மதுரை மாவட்டத்திலும் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் காவல் ஆணையர் லோகநாதன், காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி