பெற்றோரைக் கைவிட்ட மகன் மீது வழக்கு

61பார்த்தது
பெற்றோரைக் கைவிட்ட மகன் மீது வழக்கு
மதுரையில் பெற்றோரின் பூா்வீக வீட்டைக் கைப்பற்றி, அவா்களை வீட்டிலிருந்து வெளியேற்றிய மகன் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை தவிட்டுச் சந்தை வேலாயுதம் பிள்ளை 1-ஆவது தெருவைச் சோ்ந்வதா் ஜெயராமன் (83). இவா் வருவாய்த் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இவா் தனது மனைவியுடன் கீழ வெளி வீதியில் உள்ள தங்களது பூா்வீக வீட்டில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், மகன் சரவணக்குமாா் தங்களை பராமரிக்காமல் இருந்து வருவதாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஜெயராமன் புகாா் அளித்தாா். அதன்பேரில் சரவணன் தனது பெற்றோருக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் பராமரிப்புத் தொகையாக வழங்க வேண்டும் என்று ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ஆனால், சரவணன் தனது பெற்றோருக்கு பராமரிப்புத் தொகையை வழங்கவில்லை. மேலும், தனது பெற்றோரை பூா்வீக வீட்டிலிருந்து வெளியேற்றினாா். இதுதொடா்பாக மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதனிடம் ஜெயராமன் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, தெற்கு வாசல் போலீஸாா், பெற்றோா், முதுநிலை குடிமக்கள் நலச்சட்டத்தின் கீழ் சரவணன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி