மதுரை மேலமாசி வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மதனகோபாலசாமி கோயிலின் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன்
இன்று (ஆக. 18)தொடங்கியது.
மதுரை மேலமாசி வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மதனகோபாலசாமி திருக்கோவிலில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு இன்று காலை கோவிலில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
இத்திருவிழாவில் 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி புறப்பாடு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவிழா கொடியேற்றத்தின் போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.