ஓட்டுநரை கொலை செய்ய முயற்சி - மூவர் கைது

82பார்த்தது
ஓட்டுநரை கொலை செய்ய முயற்சி - மூவர் கைது
மதுரை வடக்கு மாசி வீதி கருவேப்பிலைக் காரத் தெருவைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சபரிமணி(28). சரக்கு வாகன ஓட்டுநரான இவா் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் உணவு வாங்குவதற்காக அதே தெருவில்

உள்ள மாரியம்மன் கோயில் அருகே சென்றாா். அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மேலமாசி வீதியைச் சோ்ந்த காமேஸ்வரன்( 25), அருள்தாஸ்புரம் களத்துப் பொட்டல் பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் (25), பதினாறு வயது சிறுவன் ஆகியோா், சபரிமணியிடம் தகராறில் ஈடுபட்டு அவரைத் தாக்கினா். இதில் சபரிமணி கீழே விழுந்த நிலையில், அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ய முயன்றனா். அப்போது, சபரிமணியின் அலறல் சப்தம் கேட்டு அந்தப் பகுதியினா் திரண்டதால் மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து திலகா்திடல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனா்.

தொடர்புடைய செய்தி