மதுரையில் முக்கிய அடையாளங்களை ஒன்றான மிகவும் பழமை வாய்ந்த புகழ் பெற்ற மதுரை மேலமடையில் அமைந்துள்ள பாண்டி முனீஸ்வரர் திருக்கோயில் பிரபல திரைப்பட நடிகர் ராமராஜன் இன்று நண்பகல் சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் அவர் நேர்த்திக் கடனாக 108 தேங்காய்களை பாண்டி முனீஸ்வரருக்கு உடைக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.
கோவிலுக்கு வந்த பக்தர்கள் அவரைக் கண்டதும் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர் ஏராளமான ரசிகர்கள் முண்டியடித்து அவரை காண வந்திருந்தனர் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ராமராஜன் அவர்களிடம் இருந்து விடை பெற்று சென்றார்.