சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்புக் குழுவினர் பேட்டி

75பார்த்தது
சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்புக் குழுவினர் பேட்டி

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற
பேச்சுவார்த்தை நடைபெற்ற இடத்தில் இருந்து வெளிநடப்பு செய்த வணிகர்கள் கொடுத்த பேட்டியின் போது, 2020 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட விதிகளின்படி திருமங்கலம் பகுதி மக்கள் மற்றும் வணிகர்கள் ஆதார் கார்டுகளை காண்பித்து செல்லலாம் என அமைச்சர் தெரிவித்தார். ஆனால் 2020 ஆம் ஆண்டு என்ன விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன அதை தெரிவிக்கும்படி கூறினால், அதை தெரிவிக்க மறுக்கிறார். எங்களின் கோரிக்கையை இந்த சுங்கச்சாவடியை இங்கிருந்து அகற்ற வேண்டும் என்பதே, ஆகையால் ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை நடைபெறவிருக்கும் கடையடைப்பு மற்றும் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு நடைபெறவிருக்கும் போராட்டம் நடைபெறும் என்றும், இன்று நடைபெற்ற இந்த இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையிலும் எந்த ஒரு உடன்பாடும் எட்டப்படவில்லை, நாளை போராட்டம் தொடரும் என பேட்டியில் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி