பொங்கியது பாதாள சாக்கடை கழிவுநீர்

57பார்த்தது
பொங்கியது பாதாள சாக்கடை கழிவுநீர்
பொங்கியது பாதாள சாக்கடை கழிவுநீர்

மதுரை மாநகர் பகுதிகளில் நேற்று பெய்த கனமழை. இதனால் மதுரை வடக்கு மாசி வீதியில் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் பொங்கி வெளியேறியது.

இதனால் வடக்குமாசிவீதியில் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து சாலையில் ஒடியதால் அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற பாதசாரிகள் பொதுமக்கள் கழிவு நீரில் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டது.

இதுபோன்று மழைக்காலங்களில் அடிக்கடி இந்த கழிவுநீர் அடைப்பு வடக்குமாசிவீசி சாலையில் ஏற்படுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது எனவே இந்த அடைப்பை இதுபோன்று அடிக்கடி ஏற்படும் கழிவுநீர் அடைப்பை சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி