அதிமுக பீனிக்ஸ் பறவை: செல்லூர் ராஜு

65பார்த்தது
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர். சரவணனை ஆதரித்து வடமாநிலத்தவரிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்த பின்
செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்

எங்கள் கட்சி அழிந்து போய் விடும் என்று சொல்வதற்கு அண்ணமலை என்ன விஷ்வாமித்திரரா? அண்ணாமலைக்கு அரசியலே தெரியாது. அதிமுக பீனிக்ஸ் பறவை போன்றது. எத்தனையோ பேரை பார்த்து பல சோதனைகளை கடந்து வந்துள்ளது.
அண்ணாமலை கூற்று என்பது வேடிக்கையானது, நகைச்சுவையானது, அவர் நகைச்சுவையாக மாறிவிட்டார்

அண்ணாமலைக்கு தோல்வி பயம். அதனால் இதுபோன்று பேசி பார்க்கிறார்.
இன்னும் எத்தனை நாளுக்கு இப்படி பேசுவார்.
அண்ணாமலை ஒன்றும் சூப்பர் ஸ்டார் கிடையாது. இந்த அண்ணாமலை ஜுஜுபி.
"ரோட் ஷோ" என்று பிரதமரை அழைத்து வந்து அண்ணாமலை ஒன்னுமில்லை என்று ஆக்கி விட்டார்" என்றார்.

தொடர்புடைய செய்தி