காவல்துறையினர் பாதுகாப்புடன் உணவு அளித்த அறக்கட்டளையினர்

62பார்த்தது
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஸ்டார் நண்பர்கள் அறக்கட்டளை என்ற தன்னார்வல அமைப்பானது கடந்த 175 நாட்களுக்கு மேலாக மதிய உணவுகளை வழங்கி வருகிறார்கள். நாள்தோறும் அரசு மருத்துவமனக வளாகத்தில் ஏராளமான பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கி வந்த நிலையில் கொல்கத்தா மருத்துவமாணவி கொலை சம்பவம் எதிரொலியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்திற்குள் இருந்து உணவுகள் வழங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 4 தினங்களாக அறக்கட்டளை சார்பில் உணவுகள் வழங்குவதில் பல்வேறு இடையூறு ஏற்பட்ட நிலையில் நேற்று அரசு ராஜாஜி மருத்துவமனை முன்பாக உணவு கொடுத்த போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு பொதுமக்கள் சாலைகளில் ஓடக்கூடிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று (செப்.,3) அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே காவல்துறை பாதுகாப்புடன் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது. இதனையடுத்து ஏராளமான பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து உணவுகளை வாங்கிச் சென்றனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அறக்கட்டளை சார்பில் உணவுகள் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சனை நான்கு நாட்களாக நீடித்த நிலையில் நேற்று (செப்.,3) காவல்துறையினர் உரிய பாதுகாப்புடன் உணவுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் உணவு வழங்கும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி