மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து வருவாய் கிராமங்களுக்கும் வரும் 12. 6. 2024 முதல் 25. 6. 2024 வரை வருவாய் தீர்ப்பாயம் எனப்படும்.
ஜமாபந்தி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா இன்று அறிவித்துள்ளார் மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் வெவ்வேறு நாட்களிலும் முகாம் நடைபெறுகிறது எனவே முகாமில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி தங்கள் கிராமத்திற்கான ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் அமர்ந்து பயனடைய அறிவுறுத்தியுள்ளார்.
அனைத்து கிராம மக்களும் தவறாமல் இந்த ஜமாபந்தியில் பங்கேற்று உங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.