200 கிலோ கஞ்சா கடத்திய நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தலா 1லட்ச ரூபாய் அபராதம் விதித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
கடந்த 2014ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் 200கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் மாயராஜ் என்பவருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனையும், தலா 1லட்ச ரூபாய் அபராதமும் விதித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டார்.