மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் விசிகவினர் இனிப்பு வழங்கி வெற்றி கொண்டாட்டத்தை நடத்தினார்கள்.
திமுக கூட்டணி கட்சி தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதையடுத்து, அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், கொடியேற்றி கொண்டாடினர்.
இதற்கு, மாவட்டச் செயலாளர் சிந்தனை வளவன் தலைமை தாங்கினார். தொழிலாளர் விடுதலை முன்னணி அதி வீரபாண்டியன், மாநில துணைச் செயலாளர் அழகுமலை, ஆட்டோ சங்கத் தலைவர் திருமா வாசு, செயலாளர் பிரபு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கப் பொருளாளர் பாண்டி, ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் கடல் கேசவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.