முள்ளிப்பள்ளம் பள்ளியில் விளையாட்டு விழா.

560பார்த்தது
முள்ளிப்பள்ளம் பள்ளியில் விளையாட்டு விழா.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, முள்ளிபள்ளம் பவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி விளையாட்டு தின விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது.

காலையில் நடந்த விளையாட்டு தின விழாவில், மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. மாணவ மாணவிகள் ஒலிம்பிக் சுடர் ஏற்றி பள்ளி வளாகத்தில் கொடியேற்றினர். மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி, பெற்றோருக்கான விளையாட்டு நிகழ்ச்சி என தனித்தனியாக நடந்தது.

இந்நிகழ்வில் முன்னாள் ராணுவ வீரர் சரவணன், முத்துராமலிங்கம் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். ஆசிரியை மனோகரம் நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி