மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் குடியிருப்பு பகுதி அருகே மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு பகுதியில் இருந்த மலைப்பாம்பை அருகில் நீர் நிலை அதிகமாக இருக்கும் வாய்க்காலுக்கு சென்றதால் அரை மணி நேரம் போராடி பாதுகாப்புடன் மீட்டு வனத்துறையினர் ஒப்படைத்தனர்.