பேட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.

85பார்த்தது
பேட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை கிராமத்தில் வைகை கிழக்குக் கரையில்
சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் அருள்பாலித்து வரும் சந்தனமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா மூன்று நாட்கள் நடந்தது.

நேற்று காலை நான்காம் கால யாக கேள்விகள் நடந்து வரதராஜ் பண்டிட் தலைமையில் விழா குழுவினர் புனித நீர் குடங்களை மேளதாளமுடன் கோவிலில் வளம் வந்தனர். கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, சந்தன மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று மகா அபிஷேகம் நடந்தது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வெங்கடேசன் எம். எல். ஏ. ஒன்றிய செயலாளர் பசும் பொன்மாறன்
பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், அரிமா சங்கத் தலைவர் டாக்டர் மருது பாண்டியன், பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி