ஆக்கிரமிப்பிலிருந்த வீடுகள் இடித்து தரை மட்டம்

77பார்த்தது
ஆக்கிரமிப்பிலிருந்த வீடுகள் இடித்து தரை மட்டம்
மதுரை மாவட்டம்
சோழவந்தான் அருகே முள்ளிப் பள்ளம் கிராமத்தில் ஐயப்பன் கோவில் முதல் விநாயகபுரம் காலனி வரை சாலையின் இருபுறமும் சுமார் 1. 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆக்கிரமிப்பில் வீடு கட்டி உள்ளதாகவும் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தனிநபர் ஒருவர் நீதிமன்ற வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதன்பேரில் காலை சமயநல்லூர் காவல்துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் சோழவந்தான் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி ஆகியோர் தலைமையில் சுமார் 300 போலீசார் தீயணைப்படையினர் மற்றும் வாடிப்பட்டி தாசில்தார் ராமச்சந்திரன் உட்பட வருவாய்த்துறையினர் நெடுஞ்சாலைத் துறையினர் பொதுப்பணித்துறையினர் மின்சாரத் துறையினர் போக்குவரத்து துறையினர் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் 4ஜேசிபி மிஷின், 6 டிராக்டர் ஆகியவை மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

மேலும்இந்த ஆக்கிரமிப்பை எடுப்பதற்கு முன்பாக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர். குறிப்பாகதென்கரை முள்ளிப்பள்ளம் காடுபட்டி விக்கிரமங்கலம் மன்னாடிமங்கலம் குருவித்துறை சித்தாதிபுரம் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்குச் செல்லக்கூடிய மாணவ மாணவிகள் பணிக்கு செல்லக்கூடிய ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் விவசாய தொழிலாளர்கள் ஆகியோர் போக்குவரத்து வசதிகள் செய்யாததால் மிகவும் சிரமப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி