மதுரை சோழவந்தான் அருகே கண்மாய் ஆக்கிரமிப்பு காரணமாக விவசாய பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ரிஷபம் ஊராட்சியில் ரிஷபம், திருமால் நத்தம், ராயபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள 500க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கான பாசனத்திற்கு தேவைப்படும் தண்ணீரானது கட்டக்குளம் அருகே உள்ள கண்மாயில் இருந்து வருகிறது.
இந்தக் கண்மாய் சுமார்
250 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் மேட்டுமடை, பள்ளமடை, செங்கல் மடை ஆகிய 3 மடைகள் உள்ளன. மேட்டுமடை, செங்கல் மடையில் சிறிதளவு தண்ணீர் வருகிறது. ஆனால்
பள்ளமடையில் தண்ணீர் சுத்தமாக வருவதே இல்லை.
கடந்த 3-ந்தேதி பேரணை முதல் கள்ளந்திரி ஒருபோக பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரால் ஆங்காங்கே உள்ள கண்மாய்கள் நிரம்பி அதன் மூலம் விவசாய நிலங்களில் பாசன வசதிக்கு பயன்படுத்த வேண்டும். இந்த கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஜே. சி. பி. மூலம் அகற்றி கால்வாய்களை சரி செய்து 500 ஏக்கருக்கும் மேல் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கும் இந்த பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.