மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி அம்மாச்சியாபுரம் முனியாண்டி கோவில் தெருவில் வசிக்கும் சின்ன முனியாண்டியின் 17 வயது மகள் சோழவந்தான் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்தார். இவர் கடந்த ஒரு வருடமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி சின்ன முனியாண்டி மற்றும் அவரது மனைவி செல்வராணி ஆகியோர் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். அந்த நேரத்தில் மகள் வீட்டை விட்டு வெளியே சென்ற மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
எனவே அவரது தாயார் செல்வராணி சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.