மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு.

57பார்த்தது
மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டார. தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட் டங்களை செயல்படுத்தி தோட்டக்கலைத் துறை யின் மூலம் 2024 25ம் நிதி ஆண்டில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் மானி யங்கள் அறிவிக்கப்பட்ட டுள்ளது. இதன்படி வீரிய கொடி வகை விதைகள், மா, நெல்லி, விளாம்பழக் கன்றுகள், மல்லிகை நாற்றுகள் பப்பாளி கன்றுகள் மற்றும் இயற்கை விவசா யத்தை ஊக்குவிக்க மண் புழு வளர்ப்பு கூடாரம் திட்டத்தில், பாரம்பரிய காய்கறிகள் பரப்பு விரி வாக்கம் மற்றும் தென்னை பரப்பு விரிவாக்கத்திற்கு மானியத்தில் கன்றுகள் வழங்கப்படுகிறது. எனவே நடப்பு நிதியாண்டில் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் http: // ntshorticulture. tn. gov. in/ tnhornet என்ற இணையத ளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.
மானியம் பெற நேர டியாக விண்ணப்பிக்க விரும்புவோர் நில பட்டா, அடங்கல், ஆதார், ரேஷன் கார்டு, புகைப்படம் ஆகி யவற்றை வாடிப்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத் தில் கொடுத்தும் பதிவு செய்யலாம் இது குறித்த விபரங்களை அறிய சோழவந்தான் அமைக்க மானியம் வாங்க குறுவட்டத்தில் 96266 04488, நீரேத்தான் குறுவட்டத்திற்கு 98433 07620 தென்கரை குறுவட் டத்திற்கு 96004 56111 ஆகிய எண்களில் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி