மதுரை சித்திரை திருவிழா - தேர்வு தேதியில் மாற்றம்

57பார்த்தது
மதுரை சித்திரை திருவிழா - தேர்வு தேதியில் மாற்றம்
மதுரையில் ஏப்ரல் 23ஆம் தேதி சித்திரை திருவிழா நடைபெற இருக்கும் நிலையில் 4 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு/அரசு உதவி பெறும்/ தனியார் பள்ளி மாணவர்களுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டு இருப்பதாக மதுரை முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தெரிவித்து இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “பள்ளிக்கல்வித்துறை இயக்குனரின் அனுமதி பெற்று, மதுரையில் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்க இருந்த சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 24ம் தேதி நடைபெறும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி