சென்னையில் பருவநிலை மாற்றம் காரணமாக 'மெட்ராஸ் ஐ' எனப்படும் கண் தொற்று நோய் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மழைக்காலத்தில் 'மெட்ராஸ் ஐ' கண் நோய் பரவுவது வழக்கம். தற்போது குழந்தைகள், முதியவர்களுக்கு அதிக அளவில் கண் நோய் பிரச்சினை ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், நீர் சுரந்து கொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல் உள்ளிட்டவை 'மெட்ராஸ் ஐ' நோய் தொற்றின் முக்கிய அறிகுறிகளாகும்.