'மாயி' பட இயக்குநர் சூரிய பிரகாஷ் காலமானார்

10501பார்த்தது
'மாயி' பட இயக்குநர் சூரிய பிரகாஷ் காலமானார்
சரத்குமார் நடித்த 'மாயி' படத்தின் இயக்குநர் சூரிய பிரகாஷ் இன்று (மே 27) காலை மாரடைப்பால் காலமானார். ராஜ்கிரண் நடித்த 'மாணிக்கம்' படத்தை கே.வி.பாண்டியன் என்ற பெயரில் இயக்கியிருந்தார். அதன் பிறகு தனது பெயரை சூரிய பிரகாஷ் என மாற்றிக் கொண்டு மாயி, திவான், அதிபர், வருஷநாடு உள்ளிட்ட படங்களை இயக்கினார். தெலுங்கில் ராஜசேகர் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியான பரதசிம்ம ரெட்டி என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இவரது திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி