மும்பையிடம் போராடி வென்ற லக்னோ அணி

76பார்த்தது
மும்பையிடம் போராடி வென்ற லக்னோ அணி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகளில் லக்னோ அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ வீரர்கள் களமிறங்கினர். 19.2 ஓவர்களின் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்த வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்துக்கு லக்னோ முன்னேறியுள்ளது. முதல் இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், இரண்டாவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், நான்காவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் உள்ளன.

தொடர்புடைய செய்தி