பாட்னாவின் விளிம்பில் உள்ள டானாபூரின் கோலா ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் குமார் சிங். இவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார், விசாரணை நடத்தினர். அப்போது. சில நாட்களுக்கு முன், இவரது தந்தை, ராகுல் வங்கி கணக்கில், 6 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்துள்ளார். ஆனால், தற்போது அவரது வங்கி கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லை. மேலும், பங்குச் சந்தையில் முதலீடு செய்து நஷ்டம் ஏற்பட்டதால் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.