மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் நேற்று (டிச., 05) காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முதல் நாளான நேற்று இரவு முருகப்பெருமான் தங்கமயில் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா புறப்பாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். வரும் 13ஆம் தேதி மகா கார்த்திகை தீபமும் ,14ஆம் தேதி காலை தேரோட்டமும் நடைபெற உள்ளது.