அண்டை மாநில சாராயங்கள் புழக்கம்: பழனிசாமி கண்டனம்

63பார்த்தது
அண்டை மாநில சாராயங்கள் புழக்கம்: பழனிசாமி கண்டனம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாராயம் அருந்திய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதற்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது x பதிவில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், அண்டை மாநில சாராயங்கள் புழங்குவதை தடுப்பது அரசின் கடமை என்பதை உணர்ந்து, எல்லைகளில் மதுவிலக்கு சோதனைகளை தீவிரப்படுத்தவும் முதல்வரை வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி