கோவையில் ரூ.560 கோடி மதிப்பிலான 273 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று
தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில்மக்களிடையே உரையாற்றிய அவர், தமிழ்நாட்டின் வளர்ச்சியை கண்டு சிலருக்கு பொறாமை. பொய்களையும் அவதூறுகளையும் பரப்ப வாட்ஸ் அப் யுனிவர்சிட்டி நடத்துகிறார்கள் என பாஜகவை சாடிய அவர் அவதூறு பரப்புபவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டிய சரியான காலம் வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.