இந்தியாவில் நடக்கும் ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் இளம் வயதில் சதமடித்தவர் என்ற சச்சின் தனது 22 வயதில் செய்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்காத நிலையில் அந்த சாதனையை தற்போது மும்பை வீரர் முஷீர் கான் (19) முறியடித்துள்ளார். விதர்பா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இச்சாதனையை அவர் நிகழ்த்திக் காட்டியுள்ளார்.1994-95 சீசனில் 22 வயதில் சச்சின் அடித்த சதமே இதுவரை சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.